கட்டுமானப் பணியில் தண்ணீரின் பயன்பாடு

கட்டடங்கள் கட்டுவதற்கு சிமெண்ட், இரும்பு, மணல் போன்ற அத்திவாசியப் பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு ஆகும் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறன்றன. இத்துறையில் தண்ணீரின் பயன்பாடு மிகவும் மதிப்பு மிக்கதாக விளங்குகிறது. எனினும் தண்ணீரின் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவதற்கு ஒரு சில இடங்கள் தவிர மற்ற அனேக இடங்களில் எந்தவித ஆக்கப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதே உண்மை. கட்டுமானத்தளத்தில் எவ்வாறு தண்ணீரின் பயன்பாட்டை சிக்கனப்படுத்துவது என்பது பற்றிய பல்வேறு முறைகளை விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கம். கட்டுமானப் பணியில் குறைந்த அளவு நீரைப் பயன்படுத்துவதன் மூலம் கட்டுமானச் செலவு குறைவதோடு, கட்டடம் வலுவாக அமைவதற்கும் வழிவகுக்கிறது. குறைந்த அளவு நீரைப்பயன்படுத்துவதோடு கான்கிரீட் கட்டுமானமும் வலுவாக அமைவதற்கு வழி என்ன என்பதை இங்கு பார்ப்போம். நடைமுறைக் கோட்பாடு கட்டடத்தின் கான்கிரீட் கட்டுமானத்திற்கு 456: 2000 என்ற விகிதத்தில் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது. சிமெண்ட் கலவைக்கும், கான்கிரீட்டுக்கு நீராற்றுதலுக்கும் இவ்விகிதம் 5:4 என்ற அளவில் அமைகிறது. கான்கிரீட் கட்டுமானத்தில் ஆற்று நீரை பயன்படுத்துவது சிக்கனத்துக்கும் வலுவுக்கும் ஏற்புடையதாக அமைகிறது. கான்கிரீட் கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீ ரின் தரம் கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர் அமிலத் தன்மை உடையதாக இருத்தல் கூடாது. அதில் உள்ள அளவு 6 விகிதத்துக்கு குறைவாக இருத்தல் கூடாது. அட்டவணை 1ல் கான்கிரீட் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் தண்ணீ ரின் தரம் குறித்து பொதுவாக கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தப்படும் ஆற்று நீரின் அளவு IS 456:2000 என்ற விகிதத்தில் இருந்து சிமெண்ட் கலவையும் நீராற்றுதலும் நடைபெறுவது சிறப்புடையது. நீராற்றுதலின் போது தண்ணீரில் எவ்வித எதிர் வினையும் ஏற்படக் கூடாது. பல கட்டுமானத் தளங்களில் தண்ணீரால் நீராற்றும்போது தூசுகளால் கான்கிரீட் தளத்தில் குறைபாடு ஏற்படுகிறது. தண்ணீ ரில் அசுத்தங்கள் கலந்திருப்பதால் இவ்விதக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே கட்டுமானப்பணியில் கான்கிரீட் கலவைக்கும் நீராற்றுதலுக்கும் தரமான சுத்தமான தண்ணீரே பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு துளிநீரும் பரிசோதித்துப் பார்க்கப்படல் வேண்டும். மறுசுழற்சி நீரை பயன்படுத்தலாமா? கடல் தண்ணீரும், கிணற்றுத் தண்ணீரும் (போர்வெல்) உப்புத்தன்மை அதிகம் உள்ளவை. எனவே, கான்கிரீட் கட்டுமானப் பணிக்கு கடல் தண்ணீர் கண்டிப்பாகப் பயன்படுத்துதல் கூடாது. எனினும் ஐ.எஸ். கோட் 456 மறுசுழற்சி செய்யப்பட்ட நீரை சிமெண்டின் தன்மை அறிந்து பயன்படுத்தலாம் எனக் கூறுகிறது. ஆனால் அதன் சாதக பாதகங்களை அறிந்து பயன்படுத்த வேண்டும். கட்டடத்தின் உறுதித் தன்மையும் குறைந்த அளவு தண்ணீர் உபயோகமும் கான்கிரீட் கட்டுமானம் உறுதித் தன்மயுடன் விளங்க வேண்டும். முன்கூட்டியே திட்டமிட்டு முறையாக செயல்படுத்தப்படுகிறது. கான்கிரீட்டில் கலக்கப்படும் சேர்மானங்கள் ஒன்றிணைந்தால் தான் கட்டுமானம் பாதுகாப்புடன் அமையும். இந்த சிமெண்ட் கலவையில் கட்டுமானத்தின் உறுதித் தன்மைக்கு தண்ணீரின் பயன்பாடு மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக அமைகிறது. குறைந்த அளவு நீரை உபயோகிப்பதன் மூலம் சிமெண்ட் கலவையின் உறுதித் தன்மையும் ஒருங்கிணைப்பும் சிறந்த முறையில் அமைகிறது. சிமெண்ட், தண்ணீ ர் விகிதாசார அளவு 0.45 க்கு அதிகமாகாமல் இருந்தால் தண்ணீரின் உபயோகம் பாதியாகக் குறைகிறது. இவ்வாறு குறைந்த அளவு